Prediction

  • Home    >
  • Prediction

Prediction Today

25-04-2019

மேஷம்

மேஷ ராசி அன்பர்களுக்கு அஸ்வினி நட்சத்திரத்தில் 4 பாதம் பரணி நட்சத்திரத்தில் 4 பாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் 1 ஆம் பாதம் உங்களுக்கு 10 பேர் செய்யக்கூடிய வேலையை ஒரே ஆளாக செய்வீர்கள். குறிப்பிட்ட சில நேரங்களில் இது பண்ண முடியுமா முடியாதா என்ற எண்ணம் தோன்றினால் கைவிட்டு விடுவீர்கள். அரிசி சம்பந்தமாக விவசாயம் சம்பந்தமான இரும்பு சம்பந்தமான தொழில் நுட்ப முன்னேற்றம் மருந்து சம்பந்தமான தொழில் புரிந்து கொள்வது மருத்துவமனை வைத்திருப்பவர்கள் மெடிக்கல் ஷாப்பில் வைத்திருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் தரக்கூடிய அற்புதமான நாளாக இன்று உண்டு. இடமாற்றம் ஒரு இடத்தில் இல்லாமல் செயல்பட்டு இருப்பீர்கள். சில நேரங்கள் பிரயாணம் பண்ண முடியல எங்கேயும் போக முடியல ஒரே இடத்தில் இருந்த பல நேரங்களில் சிலர் என்னடா நாம 10 இடத்தில் சுத்தினோம் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி என்ற எண்ணங்கள் மனதில் இருக்கும் .கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருக்கும் கொஞ்ச நேரத்துல மாறிவிடும் . இன்று அதிர்ஷ்டம் தரக்கூடிய அற்புதமான எண் 5 நிறம் சிகப்பு வழிபாட்டுக்கு உண்டான தெய்வம் திருச்செந்தூர் முருகப்பெருமான்

ரிஷபம்

சில நேரங்களில் கவலைகள் இருந்தாலும் பின்பு அதைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள் . அஷ்டமத்து சனியினால் கஷ்டப்பட்டு பழகி இருப்பீர்கள்.வீடு மனை இடம் பொருள் வாகனம் வாங்குவதற்கான யோகங்கள் உண்டு கூட்டுத் தொழிலில் வெற்றி பெற முடியும். கலைத்துறையில் இருப்பவர்கள் மீடியா சம்பந்தமான துறையில் இருப்பவர்கள் பத்திரிகையாளராக இருப்பவர்கள் கவிதை எழுதுபவர்கள் பாடலாசிரியர்கள் இவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரக்கூடிய நாளாக அமையும் பெருமுயற்சி நல்ல பலனைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். முயற்சித்த காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தரும் குழந்தை வரம் எதிர்பார்த்தவர்களுக்கு பலன் கிட்டும்.இன்றைய தினத்தில் அதிர்ஷ்டம் தரக்கூடிய அற்புதமான எண் ஆறு நிறம் ஊதா வழிபாட்டுக்கு உண்டான தெய்வம் திருப்பதி வழிபாடு

மிதுனம்

மிதுனராசி அன்பர்களே சில நேரங்களில் சிக்கல் எதார்த்தமாக இருக்கும் அதை எல்லாம் தாண்டி வருவீர்கள். அடுத்த வேலையை நோக்கில் செயல்படும். வேலை மாற்றம் விசேஷ பலன்களை கொடுக்கும் .அடுத்த வேலையை நோக்கி பயணித்த வேலை மாற்றம் விசேஷ பலன்களை கொடுக்கும் வெற்றிகள் கொடுக்கும் இடமாற்றம் வெளிநாடு பயணம் படிப்புக்காக பயணம் தொழிலுக்கான பிரயாணம் கைகொடுக்கும். தந்தையாருடன் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை என்பது தேவை. முயற்சித்த விஷயங்கள் முன்னேற்றம் கொடுக்கும் நாளாக இன்று உண்டு. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கக் கூடிய அற்புதமான தினம். அதிர்ஷ்டம் தரக்கூடிய அற்புதமான எண் 8 நிறம் நீலம் வழிபாட்டுக்கு உண்டான தெய்வம் மகாலட்சுமி வழிபாடு.

கடகம்

கடகராசி அன்பர்களே இன்றைய தினத்தில் அதிர்ஷ்டம் உண்டு. இன்றைய தினத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரயாணம் சம்பந்தமான முயற்சிகளில் தவிர்ப்பது நல்லது. பேச்சு துறையில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். இன்றைய தினத்தில் குழந்தைகளுக்கு நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.நடன துறையிலும் விளையாட்டு துறையிலும் பாட்டு சம்பந்தமான துறையிலும் இருக்கும் குழந்தைகளுக்கு நல்ல பலன்கள் உண்டு இன்றையதினம் அதிர்ஷ்டம் தரக்கூடிய அற்புதமான எண் ஒன்று நிறம் பலவர்ண நிறம் வழிபாட்டுக்கு உண்டான தெய்வம் விநாயகர் வழிபாடு

சிம்மம்

சிம்மராசி அன்பர்களே மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எம்பிஏ எம்பில் பிஎச்டி இவர்கள் நல்ல பலன்கள் உண்டு வெளிநாட்டுக்கு செல்ல கூடிய வாய்ப்புகள் தேடிவரும் .அரசியல் ரீதியாக உதவிகள் கிடைக்கும். திருமண காரியங்கள் கைகூடும். கூட்டுத்தொழில் வெற்றியை தரும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் உண்டு. அதிர்ஷ்டம் தரக்கூடிய அற்புதமான எண் ஏழு நிறம் மஞ்சள் வழிபாட்டுக்கு உண்டான தெய்வம் சித்தர்கள் வழிபாடு

கன்னி

கன்னி ராசி அன்பர்களே பல காரியங்களை நிதானமாக முடிவு எடுத்து செயல்படுவீர்கள். ஜெயித்தே ஆகவேண்டும் என்று எண்ணங்கள் நிறையவே இருக்கும்.அஸ்தம் நட்சத்திரத்தில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கூடிவரும். கடனுக்காக கடன் வாங்குவதை தவிருங்கள். சித்திரை நட்சத்திரத்தில் இருப்பவர்கள் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.உத்திர நட்சத்திரத்தில் இருப்பவர்கள் அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. இடம் பொருள் வீடு வாங்குவதற்கான யோகமான நாள். வேலை வாய்ப்பு கிடைக்கும்.இன்றைய தினம் அதிர்ஷ்டம் தரக்கூடிய அற்புதமான எண்4 நிறம் பிரவுன் வழிபாட்டுக்கு உண்டான தெய்வம் நரசிம்மர் வழிபாடு

துலாம்

துலாம் ராசி அன்பர்களே நினைத்த காரியங்களில் வெற்றியுண்டு. யோகமான நாள். மனநிம்மதி மனத் திருப்தி கிடைக்கும்.துலா ராசி அன்பர்களுக்கு என்ன நெனச்சிட்டு இருக்காத ரொம்ப அழகா அற்புதமாக நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடியவை. நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்றைய தினம் குடும்பத்தாருடன் சிறிது நேரம் கழிப்பதற்கான அற்புதமான நாள்.வாகனத்தில் செல்லும் போது சரியான டாக்குமென்ட் கையில் வைத்துக் கொள்ளுங்கள். கிரானைட் சம்பந்தமாக பிசினஸ் செய்து கொண்டிருப்பவர்கள் வீடு கட்டுவதற்கு சம்பந்தமான பொருட்களை வைத்து தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.துலா ராசி அன்பர்களுக்கு உண்டான அதிர்ஷ்டம் தரக்கூடிய அற்புதமான எண் 2 வழிபாட்டுப் உண்டான தெய்வம் திருப்பதி வெங்கடாசலபதி

விருச்சிகம்

விருச்சக ராசி நேயர்களே இனி என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் மனதில் இருக்கும். குழப்பம் உண்டாகும். விருச்சக ராசி அன்பர்களே உங்களுக்காக நேரத்தை ஒதுக்கி கொள்வது நல்லது கான்சன்ட்ரேட் பண்ணி ஒரு செயலை செய்யும் போது வெற்றி பெறுவீர்கள்.குடும்பம் எல்லா விஷயங்களிலும் செய்து தரக் கூடியதாக இருந்தாலும் இருப்பினும் உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி யோகா தியானம் meditation செய்யுங்கள். அனுஷம் நட்சத்திரத்தில் இருப்பவர்களுக்கு பிரயாணம் அதிகமாக இருக்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய அற்புதமான எண் நான்கு வழிபாட்டுக்கு உண்டான தெய்வம் துர்க்கை அம்பாள்

தனுசு

தனுசு ராசி அன்பர்களே சுப காரியங்கள் நடக்கும் விருப்பமானவர்களை சந்தித்து கொள்வீர்கள்.அதே சமயம் பொருள் வீடு மனை வாகனங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் ஒரு பொருள் கிடைத்தது என்றால் அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது விளம்பரப்படுத்திக் கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்..வேலைவாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு நிச்சயம் வேலைவாய்ப்பு எதிர்பார்க்கும் ஐடி சம்பந்தமான துறையிலும் சினிமா சம்பந்தமான துறையிலும் அரசியல் துறையில் இருப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் உண்டு. அதிர்ஷ்டம் தரக்கூடிய அற்புதமான எண் 1 நிறம் பலவர்ண நிறம் வழிபாட்டு கொண்ட தெய்வம் விநாயகர் வழிபாடு

மகரம்

எந்த காரியத்தையும் கவலைப்படாமல் செய்யக்கூடிய நீங்கள் ஒவ்வொரு காரியத்தையும் சின்ன சின்னதாய் யோசிச்சு யோசிச்சு யோசிச்சு யோசனை பயமாக மாறுகிறது. எதற்கும் கவலைப்பட வேண்டாம் கடமையை செய்யுங்கள் நிச்சயமாக காரியம் நல்லபடியாக நடக்கும்.காரியத்தை விட்டுக்கொள்ளலாம் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு செய்தார்கள் என்றால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு காண வாய்ப்புகள் உண்டு.அதிர்ஷ்ட எண்-6 நிலம் பெண்களுக்கு உண்டான அதிர்ஷ்ட எண்-6 நிறம் வெண்மை வழிபாடு உண்டான தெய்வம் திருப்பதி வேங்கடா சுவாமி வழிபாடு மஹாவிஷ்ணு வழிபாடு

கும்பம்

கும்ப ராசி நேயர்களே நன்மை பயக்கக் கூடிய அற்புதமான நாள். வீடு பொருள் மனை வாகனம் வாங்குவதற்கான யோகங்கள் உண்டு. சிறுதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பெருந்தொழிலாக வாய்ப்புகள் உண்டு .இன்றையதினம் அதிர்ஷ்டம் தரக்கூடிய அற்புதமான எண் ஒன்பது நிறம் ராமர் பச்சை வழிபாட்டுக்கு உண்டான தெய்வம் மகத்துவம் வாய்ந்த முருகப் பெருமான் வழிபாடு

மினம்

மீனராசி அன்பர்களே நினைத்த காரியங்களில் வெற்றி உண்டாகும் .ஜெயம் கிடைக்கும் .அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். மனத் திருப்தி கிடைக்கும்.வெளிநாட்டு பிரயாணங்கள் லாபத்தை கொடுக்கும் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசியல் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருப்பவர்கள் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.ரேவதி நட்சத்திரத்தில் இருப்பவர்கள் அவசரப்பட்டு ஒரு காரியத்தை செய்வதற்கு பதிலாக நிதானமாக செய்வது நல்லது .அமோகமான பணவரவுகள் காத்துக்கொண்டிருக்கிறது .குழந்தைகளுக்கு நல்ல முன்னேற்றம். பெண்களுக்கும் நல்ல முன்னேற்றம். இன்றைய தினத்தில் அதிர்ஷ்டம் தரக்கூடிய அற்புதமான எண்-3 நிறம் மஞ்சள்.வழிபாட்டுக்கு உண்டான தெய்வம் மகாலட்சுமி வழிபாடு.

Visitor counter